- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்கு டபுள் டிலைட்.. ஸ்பெஷல் ஐசிசி விருதை மொத்தமாக வென்ற அபிஷேக் சர்மா – ஸ்மிரிதி மந்தனா

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஐசிசி சிறப்பு விருதை கொடுத்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான வீரர் மற்றும் வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்துள்ளது. அதன் படி 2025 செப்டம்பர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் அபிஷேக் சர்மா வென்றுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக கடந்த மாதம் அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் எதிரணிகளை அடித்து நொறுக்கி அபிஷேக் அதிக ரன்கள் (314) குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதனால் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயின் பிரையன் பெனட் ஆகியோரை முந்தியுள்ள அவர் விருதை வென்றுள்ளார்.

- Advertisement -

அபிஷேக் – மந்தனா:

இது பற்றி அபிஷேக் சர்மா பேசியது பின்வருமாறு. “மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்து வெற்றி பெறும் அணியில் நானும் அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறேன். டி20 போட்டிகளில் சமீப காலங்களில் எங்களுடைய ரெக்கார்ட் இந்திய அணியின் கலாச்சாரம் மற்றும் நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது”

“எனக்கு ஆதரவளித்து வழிகாட்டிய அணி நிர்வாகம் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த விருதை வெல்வதற்கு என்னை தேர்ந்தெடுத்த குழுவுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார். அதே போல 2025 செப்டம்பர் மாதத்தின் சிறந்த சர்வதேச வீராங்கனையாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

டவுள் டிலைட்:

கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் மந்தனா 4 ஒருநாள் போட்டிகளில் 308 ரன்களை 136.58 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடிய அவர் இந்தியா வெற்றிக்கு போராடினார். அதிலும் குறிப்பாக கடைசி போட்டியில் அவர் 50 பந்துகளில் சதத்தை அடித்தார்.

இதையும் படிங்க: சி.எஸ்.கே கிடையாது.. சஞ்சு சாம்சன் செல்லப்போகும் புதிய அணி இதுதான் – விவரம் இதோ

அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் மந்தனா படைத்தார். அதனால் பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானின் சிட்ரா அமின், தென்னாப்பிரிக்கா டஸ்மின் பிரிட்ஸ் ஆகியோரை முந்தி மந்தனா விருதை வென்றுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. மொத்தத்தில் செப்டம்பர் மாதத்தின் 2 ஐசிசி விருதுகளையும் டபுள் டிலைட் போல இந்தியர்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -