ஊழல் புகார். மற்றுமொரு இந்திய பந்துவீச்சாளரிடம் விசாரணை – போலீசார் சமன்

Mithun

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரீமியர் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. இதேபோல சமீபத்தில் கர்நாடக மாநிலத்திலும் டி20 ப்ரீமியர் லீக் போட்டிகள் நடந்து முடிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சில வீரர்கள் மீது ஏற்கனவே புகார் எழுந்து விசாரிக்கப்பட்டது.

Mithun 2

இதனை அடுத்து அந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் ஏற்கனவே கர்நாடக வீரர்களான ஜிஎம் கௌதம் மற்றும் அப்ரார் காஸி உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து விசாரணையில் தற்போது மற்றுமொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஊழல் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

மேலும் மேட்ச் பிக்சிங்கில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து அவர் செயல்பட விருப்பம் தெரிவித்ததாகவும் என்கின்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அபிமன்யு மிதுன் மீது விசாரணைக்கான சமன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை கர்நாடக போலீஸ் வட்டாரம் உறுதி செய்துள்ளது. புகார் தெரிவிக்கப்பட்டுள்ள அபிமன்யு மிதுன் தமிழ் நடிகரான சரத்குமாரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithun 1

மேலும் இது குறித்த புகாரை விசாரிக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக பிரீமியர் லீக்கில் மேட்ச் பிக்சிங்கில் மற்றுமொரு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிமன்யு மிதுன் இந்திய அணிக்காக இது வரை 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -