- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னதான் கஷ்டப்பட்டு அணியில் இடம்பித்தாலும் அந்த தம்பி விளையாட வாய்ப்பே இல்ல – அவரு ரொம்ப பாவம்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா நாடு திரும்பினார். இதன் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி விளையாடியது.

அப்படி அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 227 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதன் பின்னர் நாடு திரும்பிய ரோஹித் சர்மா மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக பெங்கால் அணியைச் சேர்ந்த துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்காது என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார். அதே வேளையில் அவருடன் இளம் வீரரான சுப்மன் கில் தான் களமிறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த பல தொடர்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி சுப்மன் கில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கே துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அபிமன்யு ஈஸ்வரன் இந்த தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs BAN : நாளையை முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே இந்திய ஒருநாள் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ராகுல் திரிப்பாதி மற்றும் ரஜர் பட்டித்தார் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் வேளையில் அவரைப் போன்றே அபிமன்யு ஈஸ்வரனும் அணியில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -
Published by