இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரரான ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடக்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பிடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த ராகுல் அதன் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் ஆட்டம் படுமோசமாக அமைந்தது. அவருக்கு பதில் ரோகித் சர்மாவை துவக்க வீரராக டெஸ்ட் போட்டியில் களமிறக்கலாம் என்றுகிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் விஹாரி மற்றும் ரஹானேவின் சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இடம் கிடைக்கவில்லை. தற்போது துவக்க வீரராக அவர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக இன்னொரு இளம் வீரரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து வாய்ப்பளிக்க உள்ளது.
அவர் யாரெனில் அபிமன்யு ஈஸ்வரன் என்பவர்தான். தொடர்ந்து முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஈஸ்வரன் இந்திய ஏ அணிக்கும் சிறப்பாக ஆடி வருகிறார். எனவே அவரின் இந்த செயல்பாடு காரணமாக தற்போது இந்திய அணி நிர்வாகம் அவரை டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறக்க ஆலோசனை நடத்தி வருகிறது. அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.