- Advertisement -
ஐ.பி.எல்

தோனி இந்த ஐ.பி.எல் தொடரில் இதை செய்யனும்.. இல்லனா அது நியாயமா இருக்காது – ஏ.பி.டி கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 44 வயதினை எட்டியுள்ள வேளையில் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரே அவரது கடைசி தொடராக அமையும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏற்கனவே சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளதால் நிச்சயம் தோனி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரோடு தனது ஓய்வு முடிவினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி இந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் : ஏ.பி.டி கருத்து

கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் வலி காரணமாக அவதிப்பட்டு வரும் தோனி கடைசி சில பந்துகள் இஞ்சியிருக்கும் வேளையில் மட்டுமே பேட்டிங் செய்ய வருகிறார். அதில் ஒரு சில பவுண்டரிகளை அடித்தாலும் அவர் முன்கூட்டியே களத்திற்கு வர வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் தோனி பின் வரிசையில் பேட்டிங் வருவதை நியாயமற்றது என்றும் இந்தமுறை அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி எட்டாவது, ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி விளையாடுவதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது.

ஏனெனில் அவர் கேப்டனாக இல்லாத போது ஒரு வீரராக முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் விளையாட வேண்டும். தோனி போன்ற ஒரு ஜாம்பவான் பிளேயர் இவ்வளவு கீழ் வரிசையில் விளையாடுவது நியாயமே கிடையாது. எனவே அவர் சென்னை அணிக்காக இந்த சீசனில் நான்கு, ஐந்து ஆகிய இடங்களில் களமிறங்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 14.2 கோடி என்பது மிகப்பெரிய தொகை.. இளம்வீரர் பிரஷாந்த் வீருக்கு தல தோனி – கொடுத்த அட்வைஸ்

அழுத்தமான சூழ்நிலையிலும் ஏற்றுக்கொண்டு அவர் அணிக்காக விளையாட வேண்டும் இந்த சீசனை அவர் ரசிகர்களுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் தோனிக்கு அடுத்து சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்க சரியான நபர் என்றும் ஏபிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -