- Advertisement -
ஐ.பி.எல்

IPL 2023 : ஹார்டிக் பாண்டியா பண்ற தப்பு அந்த அணிக்கு தோல்வியை கொடுக்கலாம் – ஏ.பி.டி கருத்து

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்த 2023-வது ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பெங்களூரு அணியைச் சேர்ந்த முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் குஜராத் அணியில் கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்யும் ஒரு சிறிய தவறினை குறிப்பிட்டு அவர் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். ஆனால் அவர் அப்படி களம் இறங்குவது எனக்கு சற்று மேலே களம் இறங்குவது போன்று தெரிகிறது. ஏனெனில் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் அவர் பேட்டிங் செய்தால் அந்த அணிக்கு அது பலனை தரும்.

ஏனெனில் டாப் ஆர்டரில் வலது கை இடது கை பேட்ஸ்மேன்கள் களமிறங்குவது அந்த அணிக்கு சாதகமாக அமையும், அந்த வகையில் டேவிட் மில்லர் நான்காவது இடத்தில் களமிறங்கி ஹார்டிக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் களமிறங்கினால் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையில் பலப்படும்.

- Advertisement -

இதுதான் ஹார்டிக் பாண்டியாவின் சரியான பேட்டிங் பொசிஷன் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த அணியில் தற்போது இந்த சீசனில் பேட்டிங் வரிசையில் குழப்பம் ஏற்படும் என்று நினைக்கிறேன். அந்த அணிக்கு அவர் செய்யும் அந்த தவறு தோல்விக்கு கூட வழி வகுக்கலாம் என ஏ பி டி வில்லியர்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : இனிமேல் அவர் வாயில் பேசமாட்டார், அவரின் பேட் தான் பேசும் – நட்சத்திர இந்திய வீரரின் விமர்சனங்களுக்கு ஆண்டி ப்ளவர் பதிலடி

ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அறிமுகமான குஜராத் அணியானது ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதால் அந்த அணியின் நிர்வாகம் பாண்டியாவின் முடிவுகளின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by