நான் சர்வதேச டி20 போட்டிக்கு திரும்பாமல் ஓய்வை உறுதிபடுத்தியது இதற்காகத்தான் – ஏ.பி.டி அளித்த பதில்

ABD
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ்க்கு என்று உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றால் மிகையல்ல. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வினை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவரது ஓய்வு முடிவை வாபஸ் பெற்று மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

abd

மேலும் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இல்லை என்றும் உங்களது திறன் இன்னும் குறையவில்லை அதனால் நீங்கள் நிச்சயம் விளையாட வேண்டும் என்று பலரும் அவரிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடருக்கு முன்பாக கூட தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதற்காக ஏ.பி.டி யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில செய்திகள் வெளியாகின.

- Advertisement -

மேலும் தனக்கான இடம் இருந்தால் நிச்சயம் விளையாடுவேன் என்றும் ஏ.பி.டி தெரிவித்திருந்தார் இதனால் அவரது ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்த வேளையில் என்று அனைவரையும் வருத்தப்பட வைக்கும் அளவிற்கு ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Abd

அதன்படி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் மீண்டும் விரும்பவில்லை என்று டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என்றும் எனது ஓய்வு முடிவு இறுதியானது என்றும் அவர் கூறிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

abd

இந்நிலையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் வாய்ப்பளிக்க முன்வந்து டிவில்லியர்ஸ் ஏன் தனது வாய்ப்பை மறுத்தார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி எந்த ஒரு திறமையான கிரிக்கெட் வீரரின் இடத்தையும் நான் பிடிக்க விரும்பவில்லை. நான் திரும்பி வந்தால் அணியில் இருக்கும் ஒரு வீரரின் இடம் பறிபோகும். அப்படி அந்த வீரரின் கிரிக்கெட் எதிர்காலத்தை நான் ஸ்பாயில் செய்ய விரும்பவில்லை இதன் காரணமாகவே நான் ஓய்வு முடிவை இறுதி ஆக்கியுள்ளேன் என்று டிவிலியர்ஸ் விளக்கமளித்துள்ளார். அவர் இந்த பதில் தற்போது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement