ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்கா வீரர்.! 34வயதில் மீண்டும் டி20ல் மிரட்ட வரும் அதிரடி வீரர்.!

- Advertisement -

கிரிக்கெட் உலகில் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் தென்னாபிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தான் ஒய்வு பெறுவதாக கடந்த மே 23 அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்களும் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர் . இந்நிலையில் அவர் மீண்டும் டி20 தொடரில் விளையாட இருக்கிறார்.

abd

- Advertisement -

ஏ பி டிவில்லியர்ஸ், தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரான இவர், `14 ஆண்டுகளாக அந்த அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 228 ஒருநாள் போட்டிகள், 114 டெஸ்ட் போட்டிகள், 78 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.அதிரடி ஆட்டக்காரராக இவர் அந்த அணியின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் இருந்து வந்தார்.தென்னாபிரிக்கா அணிக்காக சில வருடம் கேப்டனாகவும் இவர் திறம்பட செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட தக்கதாகும்.

தற்போது 34 வயதாகும் ஏ பி டிவில்லியர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன், இந்த வயதிலும் பீல்டிங்கிலும் அசத்துவார். தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் விளையாடி 12 போட்டிகளில் 480 ரன்களையும் குவித்திருந்தார். மூன்றுவிதமான சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஒய்வு பெற்ற தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த உள்ளுர் டி20 தொடரில் டைடன் அணியில் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக் தொடரில் ஏ பி டிவில்லியர்ஸ் பங்கேறக்வுள்ளதாக கூறப்படுகிறது. .

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போலவே இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக் வரும் டிசம்பர் 19 தொடங்கி ஜனவரி 11 வரை நடைபெற உள்ளது. அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் 24 போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இந்த தொடருக்கான லோகோ அறிவிக்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஏபி டி வில்லியர்ஸ் கலந்து கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த தொடர் குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘“கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரை உங்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகின்றோம், அவர் மிக விரைவான 50, 100 மற்றும் 150 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்து சாதனை படைத்துள்ளார். அவர் யார் என்று கணிக்க முடியுமா? ‘என்று பதிவிட்டுள்ளது. எனவே, அது ஏ பி டிவில்லியர்சாக தான் இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement