31 வயதாகும் விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் ? – ஏ.பி.டிவில்லியர்ஸ் கணிப்பு

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பதவி வகித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு டெஸ்ட் கேப்டன் பொறுப்பினை விராட் கோலி பெற்றார். அதன்பிறகு அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

Kohli-1

- Advertisement -

அதன்பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன்ஷிப்பை பெற்றார். 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கிய கோலி தற்போது வரை 86 டெஸ்ட் போட்டிகள், 248 ஒருநாள் போட்டிகள் மற்றும் 82 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ஒரு பேட்ஸ்மேனாக தனது அசாத்திய திறமை மூலம் பல ஆண்டுகளாக இந்திய அணியை கட்டிக் காத்துவரும் கோலியால் கேப்டனாக ஒரு ஐ.சி.சி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ரசிகர்களின் பெரும் வருக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 31 வயதாகும் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் பேட்டி ஓன்றினை அளித்துள்ளார்.

Divilliers

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோலியுடன் விளையாடும் முக்கிய நம்பிக்கை நட்சத்திர வீரரும், கோலியின் நெருங்கிய நண்பருமான டிவில்லியர்ஸ் இதுகுறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கோலி ஓய்வு குறித்து கூறியதாவது :

- Advertisement -

இந்த ஊரடங்கு காலம் கோலிக்கு நல்லதாக இருக்கலாம். ஏனெனில் இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடி வந்த கோலிக்கு இது ஒரு நல்ல ஓய்வாக அமையும். மேலும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் விராட் கோலியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர் பார்க்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக கோலி என்னை விட நம்பிக்கை உடையவராக இருக்கிறார்.

ABD

ஐபிஎல்லில் களம் கண்டால் 15 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று விரும்புவார் என்பதாகவும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் குறிப்பிட்டதுபோல 3 முதல் 5 ஆண்டுகள் வரை கோலியிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்ப்பதால் கிட்டத்தட்ட கோலி 36 வயது வரை விளையாடு வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் அதன் பின்னரும் அவரது ஆட்டத்திறன் பொறுத்தே அவரது ஓய்வு முடிவும் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement