WTC Final : இப்படி அவர் நல்லா மூவ் பண்ணி நான் பாத்ததே இல்ல. அவருதான் இந்தியாவை காப்பாத்துவாரு – ஏ.பி.டி நம்பிக்கை

ABD
- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற குறையை போக்கி கொள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைத்தது. ஆனால் ஜூன் 7-ம் தேதி துவங்கிய இந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்களை குவிக்க தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

இப்படி இந்திய அணி முதல் இன்னிங்சிலேயே தடுமாற்றத்தை கண்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் இந்திய அணி இந்த வெற்றி வாய்ப்பையும் தவற விட்டு விடுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. தற்போது முதல் இன்னிங்சில் 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய அணியானது இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

- Advertisement -

என்னதான் இந்திய அணி இந்த போட்டியில் ஐந்து விக்கெட்களை இழந்திருந்தாலும் தற்போது ரகானே 29 ரன்களுடன் களத்தில் இருப்பதால் நிச்சயம் அவர் ஒரு பெரிய சதம் அடித்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் 48 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்து விளையாடி வரும் ரஹானே இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளே தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

- Advertisement -

ஜடேஜா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் இந்த இன்னிங்சின் மூலம் நிரூபித்துள்ளார். ரஹானே தற்போது ஒரு நல்ல டச்சில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்றும் நிச்சயம் இதை இன்னிங்க்ஸை பெரிய ஸ்கோராக மாற்றுவார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் :

இதையும் படிங்க : WTC Final : 512 நாட்கள் கழித்து மாஸ் கம்பேக், சிறப்பான சாதனையுடன் காப்பாற்ற போராடும் ரகானே – இந்தியா ஃபாலோ ஆனை தவிர்த்ததா?

ரகானே இதைப் போன்று மூவ் செய்து விளையாடி நான் பார்த்ததில்லை. அவருடைய டெக்னிக் தற்போது மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவர் பந்தை மிகவும் தாமதமாக விளையாடுகிறார், அற்புதமாக விளையாடுகிறார் என ஏ.பி.டி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement