ராகுலின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் இவர்கள் இருவர் தான் – பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்

Rahul

கடந்த ஆண்டு இதே மாதங்களில் கே எல் ராகுல் தனது மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் அணியில் துவக்க வீரர் இடத்தில் இருந்து கழற்றி விடப்பட்டார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் துவக்க வீரராக இருந்த இவர் ரன் குவிக்க தவறியதால் அவரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து கழற்றி விட்டது.

Rahul

அதன்பிறகு ஹர்டிக் பண்டியா உடன் இணைந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி காரணமாக அவர்கள் இருவரையும் இந்திய அணி தற்காலிக நீக்கம் செய்தது. அதன் பிறகு ஒருவழியாக 50 ஓவர் உலகக் கோப்பையில் காயமடைந்த தவானுக்கு பதில் இந்திய அணியில் இணைந்த ராகுல் அதன்பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தற்போது தனது உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் டெஸ்டில் தனது வாய்ப்பை இழந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு தொடரிலும் அவரது ஆட்டம் வேற லெவல் இருந்தது அதுமட்டுமின்றி ராகுல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டிங் மட்டுமின்றி கீப்பிங் ஆகியவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் ராகுலின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கோலி ஆகியோர் கொடுத்த அறிவுரை தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

abd

அதன்படி பல்வேறு வீரர்களுடன் கிரிக்கெட் குறித்த விடையங்களை ராகுல் பேசியிருந்தாலும் கோலி மற்றும் டிவிலியர்ஸ் ஆகியோரே அவருக்கு தேவையான தன்னம்பிக்கையை அளித்துள்ளனர். அதன்படி ஏபி டிவில்லியர்ஸ் அதிகபட்சமான அறிவுரைகளை ராகுலுக்கு வழங்கி உள்ளார். ஏனெனில் அவரும் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் என்பதால் அவரிடம் உள்ள திறன்கள் மற்றும் ஸ்கில்களை ராகுலுக்கு அவர் கொடுத்துள்ளார். அதனை பின்பற்றி ராகுல் தற்போது சிறப்பாக விளையாடுகிறார்.

- Advertisement -

rahul 4

மேலும் அதுமட்டுமின்றி கோலி எப்பொழுதும் ராகுல் மீது ஒரு நம்பிக்கை வைத்துள்ளார். அதன்படி ராகுல் எவ்வளவு திறமையானவர் என்பதை அவர் அருகில் இருந்து பார்த்து வருவதால் அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். அதனை சரியாக பற்றி கொண்ட ராகுல் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று ராகுலின் சிறுவயது பயிற்சியாளர் சமுவேல் ஜெயராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.