அணியில் அதிரடி மாற்றம் ..! பலவீன பந்துவீச்சு…தோனி வகுத்த மாஸ்டர் பிளான் – என்ன தெரியுமா ?

dhoni
- Advertisement -

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 35வது லீக் போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த போட்டியில் பெங்களூரு அணி 205 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

mavi

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணி விளையாடிய அணைத்து போட்டிகளிலும் எதிரணி சராசரியாக 170 ரன்களை குவித்துவிடுகிறது. சென்னை அணி விளையாடிய கடந்த 9 போட்டிகளிலும் எதிரணி அடித்த ரன்கள் 165,202,197,140,178,205,170,198,177 என்று அனைத்துமே சென்னை அணியின் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறது.

இதுவரை சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே சென்னை அணியில் உள்ள சிற்பான பேட்டிங் தான்.சென்னையின் கேப்டனாக தோனி கூட கடந்த போட்டியின் போது சென்னை அணியின் மோசமான பந்து வீச்சை குறிப்பிட்டு கூறினார்.

kohli

அந்த போட்டியில் தோனி கூறுகையில் பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் ஏமாற்றிவிட்டார் ,மேலும் பீல்டிங்கும் மோசமாக அமைந்துவிட்டது.எங்களது எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாக பந்துவீசவில்லை. அவர்களின் பலம் என்னவென்று அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.எதிரணியின் பேட்ஸ்மேன் பலமறிந்து பந்து வீச வேண்டும் “என்று என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும் கடந்த 3 போட்டிகளிலும் அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்ததால் இன்று நடக்க விருக்கும் போட்டியில் பந்துவீச்சாளர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பாரக்கபடுகிறது. மேலும் சென்னை அணியை பொறுத்தவரை அந்த அணியின் சில பந்து வீச்சாளர்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement