தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் முறையே 8765, 9577, 1672 ரன்களை அடித்துள்ள அவர் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று போற்றப்படுகிறார். அத்துடன் ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர்களில் ஒருவராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் வரலாற்றில் உங்களுடைய சிறந்த 5 கிரிக்கெட்டர்களை பட்டியலிடுங்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இந்தியாவின் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஆர்சிபி அணிக்காக பல வருடங்களாக இணைந்து விளையாடிய அவர்கள் மிகச்சிறந்த நண்பர்களாக போற்றப்படுகிறார்கள்.
சாரி விராட் கோலி:
அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் 27000+ ரன்கள் மற்றும் 82 சதங்கள் அடித்த விராட் கோலியை அவர் பட்டியலிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலியை தேர்ந்தெடுக்காத ஏபி டீ வில்லியர்ஸ் இந்தியாவிலிருந்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்ந்தெடுத்துள்ளார். அதே சமயம் விராட் கோலியை தேர்ந்தெடுக்காதற்காக மன்னிப்பு கேட்ட அவர் இது பற்றி ஃபியர்ட் ஃபிபோர் விக்கெட் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“காலிஸ், ஃபிளின்டாப், முகமது ஆசிப், ஷேன் வார்னே மற்றும் ரசிகர்களின் அபிமான சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய நடந்து செல்லும் போது கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற எல்லாம் நின்று விடும். அவர் பேட்டிங் செய்வதை பார்க்க அழகாக இருக்கும். மன்னிக்கவும் விராட் கோலி, அங்கே சச்சின் இருப்பார்”
ஏபிடி டாப் 5 கிரிக்கெட்டர்ஸ்:
“அதனாலேயே இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஜேக் காலிஸ் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அல்லது ஆல் டைம் சிறந்த கிரிக்கெட்டர் என்றும் சொல்லலாம். பாகிஸ்தானின் முகமது ஆசிப் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவுக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்பினேன். ஆனால் அவரை எதிர்கொள்வது எனக்கு அவ்வளவு கடினமாக இருந்ததில்லை”
இதையும் படிங்க: அந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசுவது ரொம்ப கடினம்.. அவர் செம டேலன்ட் – ரவி பிஷ்னாய் கருத்து
“இருப்பினும் அவருடைய தொப்பி, பாரிஸ் சாந்து பூசப்பட்ட முகம், பொன்னிறமான முடி போன்றவற்றை நான் விரும்பினேன். அதே போல ஆண்ட்ரே ஃபிளின்டாப் பெரிய போட்டிகளில் அசத்தக்கூடிய மேட்ச் வின்னர். குறிப்பாக எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் காலிஸ்க்கு எதிராக அவர் வீசிய யார்க்கர் பந்து நான் பார்த்ததிலேயே சிறந்தது” என்று கூறினார்.



