- Advertisement -
டி20

தாதா கங்குலி முன்னாடியே சொல்லிட்டாரு.. அஸ்வின் மாதிரி இந்திய வீரர்கள் இதை செய்யனும்.. ஏபிடி கோரிக்கை

தென்னாபிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. அத்தொடரின் 2025 சீசனுக்கான வீரர்கள் ஏலம் செப்டம்பர் 9ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 22 வயது இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 16.5 மில்லயன் ரண்ட் (சுமார் 8.13 கோடி) வாங்கப்பட்டார். அதன் வாயிலாக எஸ்ஏ தொடரில் அதிகத் தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஐசிசி 2022 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ப்ரேவிஸ் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக விளையாடினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் கடந்த சில மாதங்களாக தென்னாப்பிரிக்கா அணிக்காக ப்ரேவிஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனாலேயே அவரை எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்கு விட்டுக் கொடுக்காமல் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் சௌரவ் கங்குலி போட்டி போட்டு வாங்கினார்.

- Advertisement -

3 வாரம் முன்பாகவே:

இந்நிலையில் எஸ்ஏ20 தொடரில் பிரிட்டோரியா அணியின் பயிற்சியாளராக வரப்போவதாக 3 வாரம் முன்பாகவே கங்குலி தம்மிடம் சொன்னதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லாத இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் வந்து விளையாட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி டீ வில்லிர்யஸ் பேசியது பின்வருமாறு.

“என்னுடைய சொந்த ஊரான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் சக்திகளில் ஒருவராக கங்குலி இணைய உள்ளார். இது பற்றி எனக்கு 3 வாரங்களுக்கு முன்பாகவே தெரியும். எனவே இது எனக்கு புதிய செய்தியல்ல. ஏனெனில் நான் தாதாவிடம் (கங்குலி) தனிப்பட்ட முறையில் பேசினேன். அதை இங்கே பகிர முடியாது. ஆனால் பிரிட்டோரியா அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படப் போகிறார் என்பது எனக்கு முன்னதாகவே தெரியும்”

- Advertisement -

ஏபிடி கோரிக்கை:

“அது எங்களுக்கு சிறப்பானது. துரதிஷ்டவசமாக ஏலத்தில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளாதது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்திய வீரர்கள் எஸ்ஏ20 தொடரில் கலந்து கொள்ளாமல் இருக்கும் சங்கிலியை உடைப்போம் என்று நான் உண்மையாக நம்பினேன். என்னுடைய இந்திய நண்பர்களே, முன்னாள் வீரர்களே ப்ளீஸ் இங்கே வந்து கலந்து கொள்ளுங்கள்”

இதையும் படிங்க: மீண்டும் ஒன்றினையும் அண்டர் 19 ஜோடி.. டி20 கிரிக்கெட்டில் துவங்கும் அடுத்த சகாப்தம் – விவரம் இதோ

“பிசிசிஐ ஒப்பந்தத்தில் பெயர் இல்லாதவர்கள் தங்களுடைய தொப்பியை உயர்த்தி தென்னாப்பிரிக்காவில் கொஞ்சம் கிரிக்கெட்டை விளையாட வர வேண்டும். எஸ்ஏ20 தொடர் மிகவும் சிறப்பானது. நானும் அதில் ஒரு அங்கமாக இருப்பதை விரும்புகிறேன்” என்று கூறினார். இங்கே எஸ்ஏ20 தொடரின் தூதுவராக ஏபி டீ வில்லியர்ஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -