நெருப்பு இல்லாம புகையாது.. இந்திய அணிக்குள் ஏற்பட்ட அந்த சண்டையே தோல்விக்கு காரணம்.. ஏபிடி பேட்டி

AB De Villiers
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நிறைவு பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும் இந்தியா வைட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன்ஷிப் வேண்டும் என்று ஒரு சீனியர் வீரர் முயற்சிப்பதாக 5வது போட்டிக்கு முன்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியானது. இளம் வீரர்களால் இந்திய அணி முன்னோக்கி வழிநடத்த முடியாது என்பதால் தாம் கேப்டனாக அந்த சீனியர் வீரர் விரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியில் கேப்டன்ஷிப் சம்பந்தமாக ஏற்பட்ட சண்டை தான் இந்த தோல்விக்கு காரணம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நெருப்பின்றி புகையாது:

இது பற்றி ட்விட்டரில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே சில வதந்திகள் இருப்பது எனக்கு தெரியும். அது எனக்கு ஆச்சரியம் இல்லை. நெருப்பு இருக்கும் போது புகையும். விரோதமாக இருந்த அணிகளின் ஒரு பகுதியாக நானும் இருந்துள்ளேன். குறிப்பாக சொந்த மண்ணுக்கு வெளியே வெளிநாட்டில் குடும்பத்தை விட்டு சுமாரான ஃபார்மில் நீங்கள் விளையாடும் காலங்களில் நானும் இருந்துள்ளேன்”

“வெளிநாட்டில் விளையாடும் போது ஒற்றுமையான அணி முக்கியம். சொந்த ஊரில் விளையாடுவது எளிது. கடந்த சில வாரங்களாக இந்திய அணி தங்களுக்குள்ளேயே இழந்தார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப்படி நீங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழக்கும் போது கோப்பையை எதிரணியிடம் கொடுக்கும் பக்கத்தில் இருப்பீர்கள். இந்திய அணியின் நிலை என்ன என்பது பற்றிய உண்மை என்னிடம் இல்லை”

- Advertisement -

ஏபிடி அதிருப்தி:

“எனவே யார் யாருடன் மோதுகிறார்கள் என்பதை நான் பார்க்க காத்திருக்கிறேன். 2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் நாங்கள் தோற்ற தொடரில் நானும் இருந்தேன் பின்னர். தென்னாப்பிரிக்காவில் நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் தோற்றோம். அந்த சமயங்களில் ரோஜாக்கள் நன்றாக மலர்வதற்கான சூரிய வெளிச்சம் எங்கள் அணியில் இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டோம்”

இதையும் படிங்க: ஓய்வுக்கு பிறகு ரோஹித் சர்மா ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம்.. நக்கலாக பேசிய – சைமன் கேட்டிச்

“நான் கேப்டனாக இருந்த அணிகளில் இது போன்ற விஷயங்களை நம்பி உள்ளேன். அது தவிர்க்க முடியாதது. ஒரு அணி உண்மையாகவும் ஒருவருக்கொருவர் விஸ்வாசமாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் தோல்வியை சந்தித்தால் கூட உங்களுடைய அணி நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.

Advertisement