மறுபடியும் வலிக்குது.. ஆனா அதுக்காக பெருமைப்படுறேன்.. அடுத்த கோப்பை ஆர்சிபி’க்கே.. கலங்கிய ஏபிடி

Ab De Villiers RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் கண்டிப்பாக அந்த அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் தோல்விகளால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் ஒரு மாதத்திற்கு மேலாக கடைசி இடத்தில் திண்டாடியது.

ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த அந்த அணி கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுத்தது. குறிப்பாக கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அதனால் மகளிர் அணியை போல ஆடவர் அணியும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர்.

- Advertisement -

ஏபிடி சோகம்:
இருப்பினும் மே 22ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அதனால் 2008 முதல் தொடர்ந்து 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் அந்த அணி பரிதாபமாக வெளியேறியது. அதன் காரணமாக விராட் கோலியும் ஆர்சிபி ரசிகர்களும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னதாக இப்போட்டியை ஆர்சிபி அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் ஜியோ சினிமா சேனல் நேரலையில் வர்ணனை செய்தார். இருப்பினும் கடைசியில் தோல்வியை சந்தித்ததால் மேற்கொண்டு வர்ணனை செய்ய முடியாமல் சோகத்தில் ஆழ்ந்த அவர் எதிரே இருந்த மேஜையில் தலையை வைத்து கண்கலங்கினார். இந்நிலையில் மீண்டும் தோல்வியை சந்தித்தது வலியை கொடுப்பதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் மே மாத துவக்கத்தில் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு பின்னர் பிளே ஆஃப் சுற்றுக்குள் போராடி நுழைந்ததை நினைத்து பெருமைப்படுவதாக டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை நியமிக்க தோனியின் உதவியை நாடியுள்ள பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

“தோல்வியை சந்திப்பது எப்போதும் வலியை கொடுக்கும். ஆனால் ஒரு ரசிகனாக மே மாத துவக்கத்தில் அனைத்தையும் இழந்தது போன்ற சூழ்நிலையில் இருந்து நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த எங்கள் வீரர்களால் நான் பெருமைப்படுகிறேன். இங்கிருந்து ஆர்சிபி வலுவாக கம்பேக் கொடுத்து அடுத்த வருடம் கோப்பையை வீட்டுக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement