
வைரஸ் தொற்று காரணமாக பெங்களூர் அணி ஆடிய கடைசி இரு போட்டிகளிலும் டீவில்லியர்ஸ் பங்கு கொள்ளவில்லை. மேலும் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3 அரை சதத்தை அடித்துள்ளார்.மேலும் பெங்களூர் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதில் இருந்து போட்டிகளில் டீவில்லியர்ஸ் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் அவர் தனது உடல்நிலை குறித்து பிரபல செய்தி இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “கடந்த நான்கு நாட்களாக நான் முற்றிலும் சோர்வடைந்து விட்டான்.அந்த அளவிற்கு கடுமையான காச்சலால் நான் பாதிக்கப்பட்டேன். இதுவரை நான் இது போன்ற உடல் நிலையில் இருந்ததே இல்லை.நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு நான் எனது ஹோட்டால் ரூமில் கூட நிம்மதியாக தூங்கியது இல்லை.
அந்த அளவிற்கு என்னை எனது தலைவலியும் ஆட்டிப்படைக்கிறது ” என்று குறியிருந்தார். பின்னர் தற்போது தனது உடல் நிலை தேரிவருகிறது என்று கூறியுள்ள டீவில்லியர்ஸ்”நல்ல விஷயம் என்னவென்றால் தற்போது தனது உடல் நிலை நன்றக தெரிவருகிறது,இதனால் நான் தற்போது அணியால் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியாக உள்ளேன் .
எனவே வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள ஆட்டத்தில் நான் பங்கு கொள்வேன்.தற்போது எங்கள் அணி புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில உள்ளது, நாங்கள் இதுவரை எங்களது முழு திறனையும் இந்த போட்டியில் அ ளிக்கவில்லை. ஆனால் இனி வரும் போட்டிகளில் எங்களது முழு செயல்திறனை கண்டிப்பாக வெளிப்படுத்துவோம் ” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.