அந்த வெற்றிக்கு அப்றமும் ரோஹித்தை இந்தியா கழற்றி விட்டது நம்ப முடியல.. ஹைடன், ஏபிடி அதிருப்தி

Matthew Hayden
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்குகிறது. பெர்த் நகரில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்குகிறது. கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய அடுத்தடுத்த 2 கோப்பைகளை வென்று இந்தியா சாதனை படைத்தது.

அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது அவரால் 40 வயதில் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளது.

- Advertisement -

நம்ப முடியல:

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின்பும் ரோஹித் சர்மாவை இந்திய அணி கழற்றி விட்டதை நம்ப முடியவில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் ஒருவரால் காலம் முழுக்க விளையாட முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் 2027 உலகக் கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள்”

“உண்மையில் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற பின்பும் இந்தியா ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விடுவித்தது ஏனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே சமயம் சுப்மன் கில் கேப்டனாக வளர்க்கப்பட வேண்டும் என்பதை என்னால் பெற முடிகிறது. ஒரு நல்ல தலைவர் உருவாவதற்கு நேரம் எடுக்கும். விராட், ரோஹித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது”

- Advertisement -

ஜாம்பவான் அதிருப்தி:

“ஏனெனில் அவர்கள் வீரர்களாக மட்டுமல்லாமல் அணியில் நல்ல ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களுடைய கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக உங்களால் காலத்திற்கும் விளையாட முடியாது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ஏபி டீ வில்லியர்ஸ் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: கிரேட் விராட், ரோஹித் சர்மா அதுவரை விளையாடினால்.. அது கிரிக்கெட்டுக்கு சிறப்பானது.. ஹெட் பேட்டி

“ஹைடன் போலவே நானும் பதிலளிப்பேன். இப்போதும் அவர்கள் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்ப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். 2027 உலகக் கோப்பை அவர்களுடைய முதன்மை இலக்காக இருக்கும். அவர்கள் விளையாடுவது டைகர் உட்ஸ் மீண்டும் வந்து சில ஷாட்டுகளை அடிப்பது போன்றது. தங்களுடைய கேரியரை எப்போது முடித்தாலும் அவர்கள் அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement