நான் சதமடித்தாலும் இந்திய அணியை வீழ்த்த இவர் கொடுத்த நெருக்கடியே காரணம் – ஆரோன் பின்ச் ஓபன்டாக்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது.

INDvsAUS Toss

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர், இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் 90 ரன்களையும், ஷிகர் தவான் 74 ரன்களும் குவித்தனர். மற்ற யாரும் 30 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜாம்பா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

pandya

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் : இந்த போட்டியில் நான் சதமடித்தாலும் பந்துகளை கணிப்பதற்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது. மேலும் இரண்டு வாய்ப்புகளை எடுத்துக்கொண்டே நான் சிறப்பாக விளையாடினேன். அதிர்ஷ்டமும் என்னுடன் இருந்தது.

finch

நாங்கள் அணியாக நாங்கள் பலமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பலம் பலவீனம் உள்ளது டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார். அவருடைய பேட்டிங் எங்களை பெரிய ரன்களுக்கு செல்ல உதவியது. இறுதியில் மேக்ஸ்வெல் விளையாடிய விதம் இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்தது எங்களுடைய சிறப்பான பேட்டிங் மூலமாகவே இந்த போட்டியை வென்றோம் என்று பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement