எங்க டீம்ல இருக்குற இந்த பலம் தான் வெற்றிக்கு காரணம். அடுத்த போட்டியிலும் வெற்றி நிச்சயம் – ஆரோன் பின்ச் ஓபன்டாக்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

smith 1

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில் : இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங் பர்பாமன்ஸ்ஸை நாங்கள் கொடுத்தோம். இந்த போட்டியில் எந்த திட்டங்களும் எங்களிடம் இல்லை. பேட்டிங் சிறப்பான வகையில் அமைந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

finch

துவக்கத்திலேயே நான் அதிரடியாக விளையாடுவதால் அது அணிக்கு நல்ல அடித்தளத்தை கொடுக்கிறது. துவக்க வீரர்களாக நானும் வார்னரும் இணைந்து நல்ல அடித்தளத்தை அமைக்கிறோம். ஸ்மித் வழக்கம் போலவே தனது அசாத்தியமான பேட்டிங்கை அடுத்து வெளிப்படுத்துகிறார். இந்த போட்டியில் ஸ்டாய்னிஸ்க்கு பதிலாக களமிறங்கிய ஹென்ரிக்ஸ் சிறப்பாக பந்து வீசினார் என்று பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement