மூன்றாவது ஒருநாள் போட்டி : இந்திய வீரர்களான இந்த 2 பேர் தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தார்கள் – பின்ச் வேதனை

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்களையும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

IND

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக போராடினோம் என்று நினைக்கிறேன். ஹர்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே இருந்த பார்ட்னர்ஷிப் மிக அருமையாக இருந்தது. அவர்களே எங்ளிடமிருந்து போட்டியை பறித்து விட்டனர். அவர்கள் இருவரில் ஒருவரது விக்கெட்டை கைப்பற்றி இருந்தாலும் நாங்கள் 240 ரன்களை மட்டுமே சேசிங் செய்ய வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயித்து விட்டார்கள்.

Jadeja

இந்த போட்டியில் அறிமுகமான கேமரூன் கிரீன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே அசத்திவிட்டார். இந்த போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை நாங்கள் பயன்படுத்தியது நன்றாகவே அமைந்தது. மேலும் மேக்ஸ்வெல் சிறப்பாக இந்த போட்டியில் விளையாடினார். மீதமுள்ள வீரர்களும் நல்ல பங்களிப்பை அளித்தாலும் இந்த போட்டியில் வெற்றியை கடக்க தவறிவிட்டோம். அடுத்த டி20 போட்டிகள் ஸ்டார்க் தயாராகிவிடுவார் அவரது காயம் சிறியது என்று பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement