ஸ்மித் செய்த சதி. தேவையில்லாமல் கடுமையான கோவத்துடன் வெளியேறிய ஆஸி கேப்டன் – வைரலாகும் வீடியோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மதியம் ஒன்று 1.30 மணிக்கு துவங்கியது. இரு அணிகளுக்கும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு தற்போது பின்ச் மற்றும் ஸ்மித் விளையாடி வந்தனர். ஆஸ்திரேலிய அணி 8.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 46 ரன்களை அடித்திருந்தது. சரியாக 8.5 ஆவது ஓவரில் 19 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ரன்அவுட் ஆகி வெளியேறினார்.

ஸ்மித்தின் தவறான ஓட்டத்தினால் பின்ச் தேவையில்லாமல் ரன்அவுட் ஆகி கோபத்துடன் வெளியேறினார். பின்ச் ரன் வேண்டாம் என்றும் மறுத்தும் ஸ்மித் ஓடி வந்ததால் குழுப்பம் ஏற்பட்டு இருவரும் ஒரே திசையை நோக்கி ஓடியதால் பின்ச் தேவையில்லாமல் ரன்அவுட் ஆகவேண்டி வந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement