தோனியை தொடர்ந்து ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆஸி நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Finch

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஆரோன் பின்ச் துவக்க வீரராகவும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார். 33 வயதாகும் இவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது குறித்து தற்போது தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி தான் அவருடைய கிரிக்கெட்டில் இறுதியாக இருக்கும் என்று பின்ச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி தான் என்னுடைய கடைசி தேதியாக இருக்கும்.

அதுதான் என்னுடைய இலக்கு அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது சற்று நீண்ட காலம் தான் இருந்தாலும் என்னால் அந்த காலத்தை உறுதி செய்ய முடியும். ஏனெனில் தற்போது 33 வயதாகும் நான் அப்போது 36 வயது உடன் இருப்பேன். அதுவரையில் என்னுடைய பார்ம் மற்றும் காயம் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.

Finch

அவற்றில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்குமாயின் நான் நிச்சயம் 2023 ஆம் ஆண்டு வரை விளையாடுவேன். மேலும் அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் எனது கிரிக்கெட் கரியரை முடித்துக் கொள்ளவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Finch

ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ரிட்டயர்மென்ட் அறிவிப்பை வெளியிட தற்போது ஆரோன் பின்ச்சும் தனது ரிட்டயர்மென்ட் தேதி குறித்து வெளிப்படையாகப் பேசி உள்ளது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.