இந்திய அணியை பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்த பவுலர் இவர்தான் – ஆரோன் பின்ச் பதில்

finch1
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்போது உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில் கிரிக்கெட் வீரர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெறாது என்பதால் அனைவரும் தங்களது நேரத்தை இணையத்தில் கழித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரும் நாளை துவங்க இருந்த நிலையில் இந்த போட்டி ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதுவரை இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு துளிகூட வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் உலகளவில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது நேரத்தை ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பின்ச் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

- Advertisement -

அதில் உங்களுக்கு பிடித்த இந்திய பவுலர் யார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்த பின்ச் : தனக்கு இந்திய பவுலர்களை பொறுத்த வரையில் ஹர்பஜன் சிங்கின் பௌலிங் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஸ்பின்க்கு சாதகமான ஆடுகளங்களில் அவரது பவுலிங் அருமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பின்ச் ஹர்பஜனை தேர்வு செய்வார் என்பது நம்மில் பலரும் எதிர்பார்க்காத விஷயம் தான் இருப்பினும் மும்பை அணிக்காக இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச மட்டத்தில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பவுலர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த பின்ச் ஜான்சனின் பவுலிங்கை நெட் பயிற்சியில் எதிர்கொள்வது மிகவும் கடினம் என பதிலளித்தார்.

Advertisement