இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அதில் ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறியதால் ஓய்வு பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால் அத்தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்து வெற்றியில் பங்காற்றிய விராட் கோலி மிகவும் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
அப்படிப்பட்ட அவர் ரோகித் சர்மாவை விட மிகச்சிறந்த ஃபிட்னெஸ் கொண்டிருப்பதால் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த இங்கிலாந்து தொடரில் அவரை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்ததாக தெரிகிறது. அதற்கு முன்பாக விராட் கோலி தாமாக ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஈகோ இல்லாத கிங்:
அதன் காரணமாக 9230 ரன்களில் ஓய்வு பெற்ற விராட் கோலி 10000 ரன்கள் அடிக்கும் பொன்னான சாதனை வாய்ப்பை 770 ரன்னில் தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் சமீப காலங்களில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் முதல் நாளிலேயே தாறுமாறாக சுழலக்கூடிய சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடியதாக ஆரோன் பின்ச் கூறியுள்ளார். அந்த பிட்ச்களில் தம்முடைய ரன்களைப் பற்றி கவலைப்பாடத விராட் கோலி நாட்டின் வெற்றிக்காக விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுவே விராட் கோலி 10000 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை தியாகம் செய்ய காரணமானதாகவும் பின்ச் கூறியுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை விராட் கோலியின் லீடர்ஷிப் உயர்ந்து நின்றதாகும். நீங்கள் அவருடைய தற்போதைய பேட்டிங் ரெக்கார்டை 5 வருடங்களுக்கு முன்பு பாருங்கள்”
பின்ச் பாராட்டு:
“அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்தியா சமீப காலங்களில் முதல் நாளிலிருந்தே சுழலும் பிட்ச்களில் விளையாடுகிறது. அப்போது நீங்கள் உங்களுடைய ஈகோவை தள்ளி வைத்து விட்டு என்னுடைய அணிக்காக எதிரணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தால் போதும் என்ற மனநிலையுடன் விளையாடுவீர்கள்”
இதையும் படிங்க: விராட் கோலியின் மாபெரும் சாதனையை இன்று முறியடிக்க காத்திருக்கும் கே.எல் ராகுல் – விவரம் இதோ
“விராட் கோலி போன்றவர்கள் சொந்த மண்ணில் தங்களுடைய நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி ஃபிளாட்டான பிட்ச்களை உருவாக்குங்கள். அதில் எனக்காக பெரிய ரன்கள் குவித்து ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்களின் சாதனைப் பட்டியலில் உயர்ந்து நிற்கிறேன் என்று சொல்ல முடியும். ஆனால் அந்த ஈகோவை தள்ளி வைத்த விராட் கோலி என்னுடைய அணியின் வெற்றிக்காக சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க விரும்புகிறேன் என்று சொன்னார்” எனக் கூறினார்.



