டி20 போட்டியில் 172 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த அதிரடி வீரர்..! – யார் தெரியுமா..?

finch1

இங்கிலாந்து அணிக்கு எதிரான படு தோல்விக்கு பின்னர், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடிவருகிறது. இந்த தொடரில் இன்று(ஜூன் 3 ) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலக சாதனைப் படைத்துள்ளார்.
finch
ஆஸ்திரேலிய, பாகிஸ்தான், ஜிம்பாபே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 6 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த தொடரின் மூன்றாவது லீக் போட்டி இன்று(ஜூன் 3) ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாபே அணி ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 22 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஆரோன் பிஞ்ச் , 50 பந்துகளில் சதத்தை அடித்தார். இருப்பினும் அவர் மேலும் அதிரடியாக ஆடி 69 பந்தில் 150 ரன்களை எட்டினர்.
aaron
இவர் 71 பந்தில் 160 ரன்னை எடுத்திருந்த போது டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தனது முந்தய சாதனையை முறியடித்தார் பின்ச், இறுதியில் 76 பந்துகளில் 172 ரன்களை குவித்து டி20 போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் பின்ச். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 229 ரன்களை எடுத்து. பின்னர் களமிறங்கிய ஜிம்பாபே அணி 20 ஒவரில் 129 ரன்களை மட்டுமே எடுத்து தொலைவியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.