பும்ரா இல்லனா கஷ்டம் தான்.. இருந்தாலும் வீழ்த்துவோம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோச் ஆறுதலுடன் எச்சரிக்கை

Aaqib Javed
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்தார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து தனி ஒருவனாக போராடிய அவர் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக அந்தப் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.

அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது. அந்த 2 தொடர்களிலும் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் அவருடைய பெயர் சத்தமின்றி நீக்கப்பட்டுள்ளது. அதனால் சாம்பியன்ஸ் டிராஃபியில் அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விலகும் பும்ரா:

ஒருவேளை பும்ரா விலகினால் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வது மிகவும் கடினம் என்றே சொல்லலாம். ஏனெனில் தற்சமயத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவருமே சுமாரான ஃபார்மில் உள்ளார்கள். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா தான் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தரமான பவுலர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். அதே சமயம் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் டாப் அணிகள் குறிப்பிட்ட வீரரை மட்டும் சார்ந்திருக்காது என்று கூறியுள்ளார். எனவே மற்ற வீரர்களை வைத்து இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருந்தாலும் வீழ்த்துவோம்:

மேலும் பும்ரா இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு திட்டங்களை தயாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு ஜாவேத் பதிலளித்தது பின்வருமாறு. “இந்தியா பும்ராவின் ஃபிட்னஸ் பற்றி கவலைப்படுவார்கள். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்த வரை மிகவும் அழகான விஷயம் என்னவெனில் நீங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது”

இதையும் படிங்க: முதல் ஒன்டேவில் விராட் கோலி விலகல்.. ஜெய்ஸ்வால் உட்பட 2 அறிமுகம்.. காரணத்தை பகிர்ந்த ரோஹித் சர்மா

“ஏனெனில் உலகின் டாப் 8 அணிகள் மட்டுமே அதில் விளையாடும். அதில் பும்ரா போன்ற பவுலரை கொண்டிருந்தால் அது எந்த அணிக்கும் போனஸ் பாயிண்ட் போல இருக்கும். ஆனால் அதற்காக அவரைச் சுற்றி மட்டுமே நாங்கள் அனைத்து திட்டங்களையும் வகுப்போம் என்று அர்த்தமல்ல” என்று கூறினார்.

Advertisement