தயவுசெய்து பண்ட் 4 ஆவது இடத்துல இருந்து தூக்குங்க. இவரை 4 ஆவது இடத்தில் ஆடவையுங்க – ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

Chopra

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

pant 1

நேற்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பண்ட் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது :

இனிவரும் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரை பண்டுக்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நம்பர் 4க்கு ஐயர் தான் சரியான வீரர். ரிஷப் பண்ட் ஐந்தாவது வீரராக களம் இறங்கலாம் அதுவே சரியான காம்பினேஷன் ஆக அமையும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் ஐயர் 5 ஆவது இடத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் போட்டிகளில் அவரை நான்காம் இடத்திற்கு முன்னேற்றி, பண்டை 5வது இடத்திற்கு கொண்டு வருவதும் நல்ல யோசனையாக தான் தோன்றுகிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -