கோலி கேப்டனாக இல்லாவிட்டாலும் நல்லா ஆடுவார். டீமுக்கு பர்ஸ்ட் இவரை கேப்டன் ஆகுங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் உள்ளது. மேலும் அடுத்து எப்போது இந்த நிலைமை சீராகும் என்று தெரியாத நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டில் முடங்கி உள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தற்போதைக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

chopra

- Advertisement -

இந்த நேரத்தில் கிடைத்த ஓய்வினை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கள் வீரர்கள் தங்கள் அனுபவங்களையும் நேரலையின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தொடர்ந்து சமூகவலைத்தளம் மூலமாக பல விடயங்களை பகிர்ந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தோனி ஓய்வு பெறுவது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் ரசிகர்களிடம் எதிர்மறையாக அமைந்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். மேலும் சர்ச்சையான கருத்துக்களையும் அவ்வப்போது அவர் வழங்குவதில் வல்லவர். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்களிடம் ஆன்லைன் வாயிலாக பேட்டியும் எடுத்து வருகிறார்.

Rohith

அதன்வகையில் தற்போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் கேப்டன்ஷிப் குறித்தும் தற்போது புதிய கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு அடுத்த 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ தலைமை மாற்றம் தேவை பட்டால் ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமிக்கலாம்.

- Advertisement -

ரோஹித் சர்மாவை கேப்டனாக மாற்றுவதன் மூலம் கோலியின் ஆட்டத்திறன் எப்போதும் குறைந்துவிடாது. அவரின் ஆட்டத்திறன் ஒரு உயரத்தை எட்டி விட்டது அதிலிருந்து அவர் கீழே இறங்க மாட்டார். அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லையென்றாலும் சரி அவரது ஆட்டம் சிறப்பாகவே இருக்கும் என்றார்.

Rohith

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அணிக்கு எப்போதும் கொஞ்சம் வித்தியாசமான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அந்த விஷயத்தை இந்திய அணி ஏற்றுக்கொண்டு விட்டால் அப்போது ரோகித் சர்மாவை அணிக்கு கேப்டனாக்கலாம். ஆனால் அதுவரை கோலி கேப்டனாக தொடர வேண்டும் ஒரு கேப்டனாக அவர் உயர்ந்து கொண்டிருக்கிறார் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement