தோனி பரவாயில்ல. ஆனா ரெய்னா நீங்க இப்படி செய்திருக்க கூடாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

கடந்த பல மாதங்களாகவே தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று விவாதம் சமூகவலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தோனி டி20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Raina

தோனி தனது ஓய்வு அறிவிப்பை மிகவும் எளிமையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். தோனி ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அடுத்த அதிர்ச்சி இந்திய ரசிகர்களுக்கு காத்திருந்தது. ஆம் சின்ன தல ரெய்னாவும் தோனியின் பாதையை பின்பற்றி ஓய்வை அறிவித்தார்.

இவர்கள் இருவரும் ஒருசேர ஓய்வை அறிவிக்க கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இவர்கள் இருவரும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ஒருவாரம் ஆன நிலையிலும் அவர்கள் குறித்த செய்திகள் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் தற்போது தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் எதிர்காலம் குறித்து ஆகாஷ் சோப்ரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Raina-5

இந்நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள ஆகாஷ் சோப்ரா ரெய்னாவின் ஓய்வு முடிவை திரும்பப் பெற கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : டோனி ஓய்வு பெற்றது வேறு நீங்கள் ஓய்வு பெற்றது வேறு. டி20 உலகக்கோப்பை தொடருக்காக காத்திருந்தார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளிப்போனதால் ஓய்வு முடிவை அறிவித்தார்.

- Advertisement -

Raina

ஆனால் உங்களுக்கு 33 வயதுதான் ஆகிறது. காயத்திலிருந்து நீங்கள் முழுமையாக மீண்டுவிட்டீர்கள் தற்போது முன்பை விட பிட்டாக இருக்கிறீர்கள். பாகிஸ்தான் அணியில் அப்ரிடி எவ்வாறு ஓய்வு முடிவை அறிவித்த பிறகு மீண்டும் அதை திரும்பப் பெற்று விளையாடினாரோ அதேபோன்று இந்திய அணிக்காக நீங்கள் விளையாட வேண்டும் என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.