தோனிக்கும், ரெய்னாவுக்கும் இந்த பர்மிஷன் மட்டும் பி.சி.சி.ஐ கொடுத்தா நல்லா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா விருப்பம்

Raina

கடந்த பல மாதங்களாகவே தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று விவாதம் சமூகவலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தோனி டி20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Raina 3

தோனி தனது ஓய்வு அறிவிப்பை மிகவும் எளிமையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். தோனி ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அடுத்த அதிர்ச்சி இந்திய ரசிகர்களுக்கு காத்திருந்தது. ஆம் சின்ன தல ரெய்னாவும் தோனியின் பாதையை பின்பற்றி ஓய்வை அறிவித்தார்.

இவர்கள் இருவரும் ஒருசேர ஓய்வை அறிவிக்க கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இவர்கள் இருவரும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ஒருவாரம் ஆன நிலையிலும் அவர்கள் குறித்த செய்திகள் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் தற்போது தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் எதிர்காலம் குறித்து ஆகாஷ் சோப்ரா பிசிசிஐக்கு வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்.

அதன்படி ஆகாஷ் சோப்ரா பேசுகையில் : தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் ஐபிஎல் டி20 தொடரை போல் வெளிநாட்டு டி20 தொடர்களிலும் விளையாட வேண்டும். அதை தான் அவரது ரசிகர்களும் விரும்புகின்றார்கள். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்.

- Advertisement -

Raina-5

தோனி வெளிநாட்டு தொடரில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் ரெய்னா நினைத்தால் நிச்சயம் விளையாட முடியும் ஏனெனில் அவருக்கு இப்போது தான் 33 வயதாகிறது. பிசிசிஐ இதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இவர்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.