இலங்கை தொடரிலாவது இவங்க 2 பேரையும் சேர்ந்து விளையாட வையுங்க – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நாளை முதல் (ஜூலை 18 ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியில் ஆட வேண்டிய வீரர்கள் குறித்த தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

INDvsSL

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்த இலங்கை தொடரில் குறிப்பிட்ட இரண்டு வீரர்களுக்கு ஒன்றாக விளையாட வேண்டும் என்று தனது ஆலோசனையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் சேர்ந்து விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒரு போட்டியில் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து புறக்கணிப்பது சரியானது அல்ல. இலங்கை அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இவர்கள் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமையும் வெளிப்படும். இந்திய அணியின் சுழற்பந்து ஜோடியாக சிறப்பாக விளையாடிய அவர்களை தற்போது வாய்ப்பு கொடுக்காமல் அமர வைப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.

Chahal

இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர்களின் திறமையை வெளிக்கொணர முடியும் எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட குல்தீப் யாதவ் இப்போது ஐபிஎல் தொடர்களிலும் அணியில் இடம் பெற்றாலும் பிளேயிங் லெவனில் விளையாடுவதில்லை.

ஆனால் சாஹல் மட்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது மட்டுமின்றி இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ச்சியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement