- Advertisement -
ஆசிய கோப்பை

பும்ராவை விட சிறந்த பவுலரான அவரை சாம்பியன்ஸ் ட்ராபி மாதிரி பெஞ்சில் உட்கார வைக்காதிங்க.. ஆகாஷ் சோப்ரா

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமீரகத்தை அசால்ட்டாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அந்தப் போட்டியிலாவது இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில் 2022ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்குள் இந்தியாவுக்காக 99 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். அதன் வாயிலாக ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராபி முடிஞ்ச்சு:

இருப்பினும் துபாயில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதாக கருதும் இந்திய அணி அவரை பெஞ்சில் அமர வைத்து பும்ராவை மட்டுமே வேகப்பந்து வீச்சு துறையில் தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவை விட அர்ஷ்தீப் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

எனவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியின் போது துபாயில் இருந்த சூழ்நிலைகளை மனதில் வைத்துக்கொண்டு 2025 ஆசியக் கோப்பையில் அர்ஷ்தீப்பை பெஞ்சில் அமர வைப்பது சரியில்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய பிளேயிங் லெவனில் இப்போதும் சாம்பியன்ஸ் ட்ராபி தொங்குகிறது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

பெஞ்சில் அமர வைக்காதிங்க:

“அது மார்ச் மாசம் நடந்து முடிந்து விட்டது. துபாய் மைதானத்தில் ஸ்கொயர் பகுதி தற்போது மார்ச் மாதத்தில் இருந்தது போல் அல்லாமல் உலர்வாக இருப்பதை நான் எப்போதும் பார்த்ததில்லை. இது செப்டம்பர் மாதம். ஆனால் இப்போதும் அவர்கள் வேறு ஃபார்மட்டாக இருந்தாலும் அதே திட்டத்துடன் வந்துள்ளார்கள். இது தான் இந்தியா திட்டம் தீட்டும் விதமா?”

இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனுக்குள் வந்தா வெளியேறப்போவது யார்? – வாய்ப்பை இழக்கப்போகும் இளம்வீரர்

“நீங்கள் தற்போதைய சூழலுக்குத் தகுந்தார் போல் உங்களுடைய சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அர்ஷ்தீப் 99 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஜஸ்ப்ரித் பும்ராவை விட அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள அவருடைய நம்பர்களும் சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார். இதை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -