
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராத் கோலி ஆகியோர் கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் இருவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடர் என்பதினால் இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சுப்மன் கில் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த இங்கிலாந்து தொடருக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதால் அவர்களது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
அதோடு நட்சத்திர வீரரான விராட் கோலியின் நான்காவது இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். அந்த வகையில் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டிருந்த அந்த பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதேபோன்று மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு தமிழக இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சனை தேர்வு செய்துள்ளார்.
நான்காவது இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக சுப்மன் கில் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் வழக்கம்போல் ரிஷப் பண்ட்டையும், ஆறாவது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ்குமார் ரெட்டியையும் தேர்வு செய்துள்ளார். ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் கூடுதல் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.
மீதமுள்ள மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கான இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடப்போகும் வீரர் – கன்பார்ம் செய்த கம்பீர்
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) நிதீஷ்குமார் ரெட்டி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) முகமது சிராஜ், 11) பிரசித் கிருஷ்ணா.