இலங்கை அணிக்கெதிரான தொடரில் இவரை ஏன் டீம்ல சேக்கல. இதெல்லாம் அநியாயம் – ஆகாஷ் சோப்ரா விளாசல்

Chopra
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக ஜூலை மாதம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் கலந்து கொண்டு இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணி வீரர்களின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் 20 பேர் கொண்ட முதன்மை வீரர்கள் மற்றும் 5 நெட் பவுலர்கள் என 25 பேர் அறிவிக்கப்பட்டனர்.

Sl

- Advertisement -

இந்த அணியில் ஏற்கனவே பல வீரர்கள் தங்களுக்கு அணியில் இடம் கிடைக்காததற்கு அதிர்ச்சி தெரிவித்திருந்தனர். அந்தவகையில் செல்டன் ஜாக்சன், உனட்கட், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தற்போது இந்திய அணி அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இளம் வீரர் ஒருவருக்கு சப்போர்ட் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதன்படி யூடியூப் வலைதளத்திற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதலில் ஃபிட்னஸ் இல்லை என்ற காரணமாக ராகுல் திவாதியா விளையாடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனாலும் பிறகு அணியில் இடம் பிடித்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இவரை எப்படி அணியிலிருந்து நீக்கினார்கள்.

Tewatia

ஒரு வீரரை அணியில் விளையாட வைக்காமலேயே அணியில் இருந்து நீக்குவது அநியாயம். ராகுல் திவாதியா கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வருகிறார். ஹரியானா அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் வெற்றிபெற வைத்திருக்கிறார். அதேபோன்று 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக அவர் விளையாடியுள்ளார். எனவே அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு வீரர் இந்திய அணியில் தேர்வாகும் போது அவர்களுடைய குடும்பம், உறவினர்கள், பயிற்சியாளர் என அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால் அதுவே ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்காமல் அணியில் இருந்து வெளியேற்றப்படும் போது அந்த வீரருக்கு எவ்வளவு வலி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத கிருஷ்ணப்பா கவுதமிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ராகுல் திவாதியாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இதெல்லாம் என்ன நியாயம் என்று அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement