இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்னர் இவர்களே ஓப்பனர்களாக இறங்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் ரன் குவிப்பு இதுவரை அபாரமாக இருந்து வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னர் துவக்க ஜோடியின் பங்கு பெரிதளவு உள்ளது என்றால் அது மிகை அல்ல.

ஏனெனில் இந்த தொடரில் இதுவரை ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி சிறப்பான ரன் குவிப்பை வழங்கி வருகிறது. ராகுல் இந்த தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 244 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று ரோகித் சர்மாவும் 4 இன்னிங்ஸ்களில் 152 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடர் ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் இருவரும் இந்திய அணியின் துவக்க ஜோடி என்று யாருக்குமே தெரியாது.

- Advertisement -

ஏனெனில் ரோகித் மற்றும் கில் தான் இந்த தொடரில் துவக்க ஜோடியாக களமிறங்குவார்கள் என்று கூறப்ப்பட்டது. ஆனால் காயம் காரணமாக கில் வெளியேறியதை தொடர்ந்து மாயங்க் அகர்வால் துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரும் காயம் அடைந்து விட்டதால் ராகுல் வேறு வழியின்றி களமிறங்கினார். தற்போது இந்த ஜோடி மிக சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் முதல் இனிங்ஸில் 84 ரன்கள் விளாசிய ராகுல் லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார்.

Rahul-1

ரோகித் பெரிய ரன் குவிப்பில் ஈடுபடவில்லை என்றாலும் துவக்க வீரராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்த ஜோடியே களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் தொடர்களில் இவர்களே துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ; ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் இந்த தொடரின் முதன்மை துவக்க ஜோடி கிடையாது.

rahul 1

இருப்பினும் ஒரு வழியாக அவர்கள் வாய்ப்பினை பெற்று தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். என்னை பொறுத்தவரை ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோரது ஜோடி சிறப்பாக உள்ளது. எனவே இனிவரும் தொடர்களில் அவர்களே துவக்க ஜோடியாக களமிறங்க வேண்டும். இதன் காரணமாக கில் மற்றும் அகர்வால் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement