என்ன நடந்தாலும் சூரியகுமார் யாதாவிற்கு வாய்ப்பு கிடைக்காது. அதற்கு காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரிலும் அவரது ஆட்டம் சிறப்பான வகையில் அமைய உடனடியாக அந்த தொடர் முடிந்ததும் அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டார்.

sky

ஆனால் இங்கிலாந்து சென்ற அவர் தற்போதுவரை பென்ஞ்சில் தான் அமர வைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இந்திய அணியில் சொதப்பலாக இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சூர்யகுமார் யாதவ்க்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் வாய்ப்பை வழங்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது பக்குவமான நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளிலும் நிச்சயம் பலம் சேர்ப்பார் என்பது அனைவரது கருத்தாகவும் இருக்கிறது. இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அவர் இன்னும் அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

sky

சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் அந்த வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியில் எந்த வீரர்களை நீக்கிவிட்டு நீங்கள் சூர்யகுமார் யாதவ்வை அணியில் இணைக்க முடியும். கண்டிப்பாக டாப் 5 வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது. அதே போன்று ஆறாவது பேட்ஸ்மேனை களமிறக்க நினைத்தாலும் சூரியகுமார் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்காது.

எனவே என்னை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் இந்த தொடர் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக வாய்ப்பில்லை என நேரடியாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement