ப்ரித்வி ஷா கிட்ட இருக்குற பிரச்சனை இது ஒன்னு தான். அதை சரிசெய்ஞ்சா வேறலெவல் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Shaw
- Advertisement -

இந்திய அணியில் பல்வேறு வீரர்கள் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு சிறந்த வீரர்களாக உருவாகி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்கனவே பல ஜாம்பவான்கள் விளையாடி வெளியேறிய நிலையில் அடுத்த தலைமுறை வீரர்களாக தற்போது விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து இளம் வீரரான ப்ரித்வி ஷா பார்க்கப்பட்டு வருகிறார்.

Shaw

- Advertisement -

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே அறிமுகமான ப்ரித்வி ஷா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அது மட்டுமின்றி தனது அதிரடியான துவக்கத்தின் மூலம் குட்டி சேவாக் எனவும் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற ப்ரித்வி ஷா கடந்த சில தொடர்களாக பார்ம் அவுட்டில் இருந்ததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அலி தொடர், விஜய் ஹசாரே தொடர் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா மீண்டும் பார்முக்கு திரும்பினார்.

அதுமட்டுமின்றி நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார் தற்போது இந்த ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணியின் துவக்க வீரராக இடம்பிடித்த பிரித்வி ஷா 3 ஆட்டங்களிலும் தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

shaw

இதன் காரணமாக நிச்சயம் அவர் எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இடம் பிடிப்பார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ப்ரித்வி ஷா குறித்து பேசி உள்ள முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இலங்கை அணிக்கு எதிரான முதல் மற்றும் மூன்றாம் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது சிறப்பு என்னவென்றால் எத்தனை பீல்டர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இடையே பவுண்டரி அடிக்கிறார். ஆனால் நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பெரிய இன்னிங்ஸ் ஆக மாற்ற முடியாமல் தவிக்கிறார்.

shaw-2

இது மட்டுமே அவரிடம் உள்ள ஒரு குறை இதை அவர் சரி செய்தால் போதும் மற்றபடி எந்தவித மாற்றமும் அவரிடம் தேவையில்லை. அவர் மட்டும் 100 – 150 ரன்கள் எடுத்து பெரிய ரன்களை குவித்தால் அதன் பின்னர் அவரை தேர்வாளர்கள் புறக்கணிக்க முடியாது. எனவே இனிவரும் காலத்தில் நல்ல துவக்கம் கிடைக்கும் பட்சத்தில் அதை பெரிய இன்னிங்ஸ்ஸாக ப்ரித்வி ஷா மாற்ற வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement