இந்திய அணியில் இவர் ஒருவர் எதுக்கு இருக்காருனே தெரியல. டூரிஸ்ட் மாதிரி என்ஜாய் பண்றாரு – ஆகாஷ் சோப்ரா விளாசல்

Chopra
- Advertisement -

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், இதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற டிசம்பர் 17ம் முதல் அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

INDvsAUS

- Advertisement -

டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரு அணிகளும் முழுமூச்சாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்ற பயிற்சி போட்டியில் கூட இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்ம்னான ரிஷப் பண்ட் இடம்பெறாதது வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் சமீபத்திய போட்டியில் கூட சொற்ப(5) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ரிஷப் பண்ட் தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுகுறித்து கிரிக்கெட் வல்லுனரான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட்டை ஒரு பீல்டராக கூட தேர்வு செய்யவில்லை. இந்த நிலை ரிஷப் பண்டிற்கு மாபெரும் நெருக்கடியை உண்டாகும் என்றார்.

Pant

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் கடைசி இடத்தில் இருக்கிறார். இது அவரது எதிர்காலத்திற்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விக்கெட் கீப்பராக களம் இறக்கவில்லை என்றாலும் ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்கி இருக்கலாம். தற்போது ரிஷப் பண்டின் நிலையை பார்க்கும்போது ‘ஆஸ்திரேலிய நாட்டை சுற்றி பார்க்க வந்த டூரிஸ்ட் போல் உள்ளார்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Pant

மேலும் இந்த தொடர் முழுவதும் பண்ட் இடம்பெற்றிருந்தாலும் அவர் அணியில் விளையாடப்போவதில்லை. இப்படி ஒரு நிலையில் இது அவரின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. அவருக்கு பின்னர் இன்னும் பல வீரர்கள் அவரது இடத்தை பிடிக்க காத்திருக்கின்றனர் என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement