உலகக்கோப்பை டி20 தொடரில் இந்த இருவரில் யார் 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடுவார்கள் – ஆகாஷ் சோப்ரா பதில்

Chopra
Advertisement

இந்திய அணியில் எப்பொழுதுமே மிடில் ஆர்டரில் ஒரு இடம் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்திய அணியில் 4-வது வீரராக விளையாடும் பேட்ஸ்மென்களுக்கான இடம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே சிக்கலான இடமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல வீரர்களை நான்காவது இடத்தில் பரிசோதித்து இறுதியாக ஸ்ரேயாஸ் அய்யர் அந்த இடத்தில் விளையாட வைத்து தற்போது அவரும் அந்த இடத்தை சிறப்பாக விளையாடி உறுதி செய்து வைத்திருந்தார்.

Iyer

ஆனால் ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது விளையாடாமல் இருக்கும் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது வாய்ப்பினை பெற்று பிரமாதமாக விளையாடி அசத்தியுள்ளார். மேலும் எதிர்வரும் இலங்கை தொடரிலும் நான்காவது இடத்தில் களமிறங்க இருக்கும் அவர் இந்த இலங்கை தொடரிலும் அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்த நான்காவது இடத்தில் யார் இறங்குவார்கள் என்ற கேள்வி எழும்/

- Advertisement -

இதனால் அந்த இடத்திற்கு ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்றும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நான்காவது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் உலாவி வருகிறது.

sky 1

இந்நிலையில் அந்த இடம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : தற்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடுவதால் யாரை அங்கு விளையாட வைப்பது என்பதை பொருத்திருந்து தான் முடிவு செய்ய வேண்டும். இனி வரும் தொடர்களில் தான் யார் அந்த இடத்தில் இறங்குவார்கள் என்று தெரியும். ஏனெனில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகிய இரண்டு தொடர்கள் மட்டுமே உள்ளன.

எனவே இனிவரும் தொடர்களின் செயல்பாடுகளின் அடைப்படையில் தான் அந்த இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது தெரியும். எனவே 4-வது வீரராக யார் களம் இறங்குவார்கள் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. இனி வரும் போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்களோ அதனை வைத்து தான் தீர்மானிக்க முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement