முகமது சிராஜ் விடயத்தில் நிர்வாகம் செய்வது ரொம்ப தவறு.. சுட்டிக்காட்டிய ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ

Aakash Chopra and Siraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தார். ஆனால் அதன்பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முகமது சிராஜ் விடயத்தில் நிர்வாகம் செய்வது தவறு : ஆகாஷ் சோப்ரா

தற்போதைய இந்திய அணியில் பும்ராவுக்கு அடுத்து நம்பிக்கை வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் தான் திகழ்ந்து வருகிறார். ஆனாலும் அனுபவ வீரரான அவருக்கு இந்திய ஒருநாள் அணியிலும் சரி, டி20 அணியிலும் சரி தொடர் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்த விவகாரம் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

- Advertisement -

அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது சரிதான் என்றாலும் அனுபவ வீரரான முகமது சிராஜை அவ்வப்போது இந்திய அணி வெள்ளை பந்து போட்டிகளில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டும் சமநிலையில் இருக்கும்.

ஆனால் முற்றிலுமாக முகமது சிராஜை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் இந்திய அணியின் நிர்வாகம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை நிராகரித்து வருவது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய நிர்வாகம் இப்படி முகமது சிராஜை அலைக்கழிப்பது மிகப்பெரிய தவறு என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : முகமது சிராஜை டெஸ்ட் பிளேயராக மட்டும் மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் சமீப காலமாகவே அவர் ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் தொடர்ந்து இடம் பிடிப்பதில்லை. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கூட முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். ஆனால் அவரை எதற்காக நிர்வாகம் டெஸ்ட் வீரராக பார்க்கிறது என்பது புரியவில்லை.

இதையும் படிங்க : டீமோட நல்லதுக்கு தான் சுயநலமின்றி கே.எல் ராகுல் இதை செய்றாரு – டேல் ஸ்டெயின் புகழ்ச்சி

முகமது சிராஜ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவர். அவரால் புதுப்பந்தில் ஸ்விங் செய்து வீச முடியும். மிடில் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க முடியும். இப்படி ஒரு திறமையான பந்துவீச்சாளரை காரணம் சொல்லாமல் ஓரம் கட்டுவது தவறு என ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement