இவரை ஏன் டி20 அணியில் செலக்ட் பண்ணல. இப்படி பண்ணா அவரோட கரியர் முடிஞ்சிடும் – ஆகாஷ் சோப்ரா

Chopra

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி துவங்கி மார்ச் 8ஆம் தேதி முடிவடையவும் உள்ளன. அதன் பிறகு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

INDvsENG

அதில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷன், வருண் சக்ரவர்த்தி, ராகுல் திவாதியா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதுதவிர டி20 அணியில் தனது இடத்தை தவற விட்ட பண்ட் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த டி20 அணி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா போன்ற இளம் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடிய மணிஷ் பாண்டே அணியில் சேர்க்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

pandey 1

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்போதெல்லாம் டி20 அணி வருகிறதோ அப்போதெல்லாம் மனிஷ் பாண்டே பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை அவரது பெயர் இல்லாதது அவரது கிரிக்கெட் கேரியருக்கு பெரும் ஆபத்தாக விளையக்கூடும் என்று கூறியுள்ளார். மேலும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மனிஷ் பாண்டே சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரம் இதோ :

- Advertisement -

Pandey

அணி வீரர்களின் லிஸ்ட் இதோ : 1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (து.கேப்டன்), 3. கே.எல்.ராகுல், 4. ஷிகார் தவான், 5. ஷ்ரேயாஸ் ஐயர், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஹர்திக் பாண்யா, 8. ரிஷப் பண்ட், 9. இஷான் கிஷான், 10. சாஹல், 11. வருண் சக்ரவர்த்தி, 12. அக்ஸர் பட்டேல், 13. வாஷிங்டன் சுந்தர், 14. ராகுல் திவாட்டியா, 15. நடராஜன், 16. புவனேஷ்வர் குமார், 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. ஷர்துல் தாகூர்