கட்டாயம் முதல் டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடுவார். இவர் தான் நம்மல காப்பாத்தனும் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது நாளை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டிய முனைப்பில் உள்ளது. ஏனெனில் இந்திய அணி கடைசியாக 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது அதன் பிறகு இதுவரை இங்கிலாந்தில் நாம் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் பலமாக திரும்பும் வகையிலும் இந்த தொடரில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியமாக அமைந்துள்ளது.

INDvsENG 1

இந்திய அணியில் தற்போது பந்துவீச்சாளர்களின் பலம் என்பது அதிகமாக உள்ளது. அணியில் ஏகப்பட்ட சிறப்பான பவுலர்கள் உள்ளனர். இங்கிலாந்து மைதானத்திலும் அவர்கள் தங்களது திறனை சரியாக வெளிப்படுத்தும் அளவிற்கு திறமையான பௌலிங் லைன் அப் நம்மிடம் உள்ளது. ஆனால் தற்போது உள்ள குறை யாதெனில் அயல்நாட்டு மைதானங்களில் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்து வெளிப்படுத்தும் வீரர் இல்லை என்ற குறை தான் உள்ளது.

- Advertisement -

மேலும் விக்கெட்டுகள் விழ தொடங்கினால் அடுத்தடுத்து விழுவதால் நல்ல நிலையான பேட்ஸ்மென் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் நிச்சயம் இந்திய அணிக்கு உதவியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rahul

ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. இங்கிலாந்தில் அவர் டெஸ்ட் சதம் ஏற்கனவே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது நடந்த பயிற்சி போட்டியிலும் சதம் விளாசியுள்ளதால் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு மிக உதவியாக இருப்பார். என்னை பொருத்தவரை ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவதை விட இந்திய அணி பலவீனமாக இருக்கும் மிடில் ஆர்டரில் அவர் இறங்கினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும்.

Rahul

மேலும் பின்வரிசையில் விகாரியும் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமையும் என்னைப் பொருத்தவரை துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் வேறொரு வீரரை இறக்கி ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கினால் நிச்சயம் இந்திய அணிக்கு அது பலத்தைத் தரும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement