நீங்க சொல்ற மாதிரி சச்சின், கவாஸ்கர்ன்னு எதுவும் நடக்காது. எல்லாம் தகுதியின் அடிப்படையில் தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா எப்பொழுதும் சர்ச்சையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் யூடியூப் சேனல் மூலம் வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இந்திய அணியின் தேர்வு முறை குறித்து பேசுகையில் கூறியதாவது :

chopra

இந்திய கிரிக்கெட்டை பொறுத்த மட்டில் உயர்மட்ட அளவிலான போட்டிகளுக்கு வீரர்களின் உறவினர், வீரர்களின் சொந்த பந்தம் என எந்த ஒரு அடிப்படையிலும் யாருக்கும் வாய்ப்பு கொடுத்ததை நான் பார்த்ததில்லை. அப்படி ஒருபோதும் இந்திய அணியில் நடக்காது ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வீரரின் மகன் அல்லது உறவினர் என்பதற்காக ஐபிஎல் போட்டியில் கூட எந்த வீரருக்கும் ஒப்பந்தம் இதுவரை அளிக்கப்படவில்லை.

- Advertisement -

இதற்கு உதாரணம் கூற வேண்டுமானால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் மகன் என்பதற்காக ரோகன் கவஸ்கர் இந்திய அணியில் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. பெங்கால் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காரணத்தாலேயே அவர் இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால் ஒருசில போட்டி முடிந்ததும் அவர் வெளியேற்றப்பட்டார்.

IND-2

அவரது பெயரில் கவாஸ்கர் என்று இருந்தாலும் ரஞ்சி போட்டிக்கான மும்பை அணியில் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோலத்தான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். சச்சினின் மகன் என்பதால் அவருக்கு எந்த ஒரு உரிமையும் வழங்கப்படவில்லை.

- Advertisement -

இந்திய அணியில் அவரால் எளிதில் எளிதில் நுழைந்து விட முடியாது. கீழ்மட்ட அளவிலான போட்டிகளில் வேண்டுமானால் சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம். ஆனால் அண்டர் 19 அணியில் கூட திறமை இருந்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். இது போன்ற பயனற்ற தேர்வுகள் ஒருபோதும் இந்திய அணியில் நடந்ததில்லை.

sachinarjun

தகுதியின் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இனி மேலும் இந்த முறையே தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். அதனால் சொந்த விருப்ப விருப்பங்கள் மற்றும் சப்போர்ட் என எதுவும் இன்றி, திறமை இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement