இவர் இப்படி மோசமா விளையாடுறத நெனச்சா கஷ்டமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்

Chopra
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

cup

- Advertisement -

இதனை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் தற்போது 2-வது நாளாக தொடர்ந்து விளையாடி வருகிறது. நேற்றைய போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. துவக்க வீரர் நேற்றைய ஆட்டத்தின் போது டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரின் போது அறிமுகமான கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்தார்.

ஏற்கனவே இந்திய அணியின் ஓப்பனர் இடத்திற்கு பலர் போட்டியில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே கில் பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் 29, 50, 0, 14,11, 15, 0 என அடுத்தடுத்து ஏமாற்றத்தை அளித்து வருகிறார்.

Gill-1

இந்நிலையில் இந்த தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கில் மூன்று முறை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கில் ஏன் இத்தனை முறை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க வேண்டும் ? எங்கு மிஸ் செய்கிறோம் என்பதை அவர் கண்டறிந்தாக வேண்டும்.

Gill

தொடக்க வீரராக ரன்களை குவிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் உள்ளது. இது கொஞ்சம் கவலை அளிக்கின்ற விஷயமாக உள்ளது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விரைவில் எங்கு தனது ஆட்டத்தை இழக்கிறோம் என்பதனை கண்டறிந்து அவர் சரி செய்தாக வேண்டும் இல்லையென்றால் அவருடைய இடத்திற்கு மாற்றுவீர்கள் காத்திருப்பதை அவர் உணர வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement