அவரிடம் பவுலிங் மட்டுமல்ல. பேட்டிங்கும் இருக்குனு எனக்கு 10 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது தற்போது இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என்ற கணக்கில் முதலிரு போட்டிகளையும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவியது மட்டுமல்லாமல் முன்னிலையில் உள்ளது.

deepak 2

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. கடந்த 2வது போட்டியின்போது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 275 ரன்களை குவித்தது. பின்னர் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் நிச்சயம் இலங்கை அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, க்ருனால் பாண்டியா ஆகியோரது நிதான ஆட்டத்தால் இந்திய அணி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் அவர்களும் ஆட்டமிழக்க இறுதியில் 10 ஓவர்களுக்கு 68 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் களத்தில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது மட்டுமில்லாமல் ஒரே இரவில் ஹீரோவாக மாறினார்.

deepak

நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தீபக் சாகர் உடனான நினைவு குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 10 வருடத்திற்கு முன்பே நான் தீபக் சாகரை சந்தித்தபோது அவர் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படமுடியும் என்று என்னிடம் கூறினார்.

deepak 1

மேலும் எப்பொழுது பேசினாலும் பேட்டிங்கில் அவரது திறன்கள் மற்றும் அவரால் பவுண்டரி சிக்சர்கள் அடிக்க முடியும் என்று என்னிடம் நிறைய முறை கூறி இருக்கிறார். எனவே இந்த சிறப்பான ஆட்டம் அவருக்கு அதிர்ஷ்டத்தால் கிடைக்கவில்லை. அவரது பேட்டிங்கின் மீது அவர் வைத்த நம்பிக்கையே அவரது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement