இந்திய அணியில் இருந்து இவங்க 2 பேர் புறக்கணிக்கப்பட்டது ஆச்சரியமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா கேள்வி

Chopra
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சில குறிப்பிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தும், சில முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும் இருந்தது.

INDvsNZ

இந்நிலையில் இந்த வீரர்களின் பட்டியலில் ஒரு சில வீரர்கள் இடம் பெறாதது குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கேள்வியினை முன்வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் : புவனேஸ்வர் குமார் எவ்வளவு சிறப்பாக பந்தை ஸ்விங் செய்வார் என்பது நமக்கு தெரியும். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அவரது பந்து வீச்சு இந்திய அணிக்கு நிச்சயம் அவசியம். ஒரு பெரிய அணியை வைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நிச்சயம் புவனேஸ்வர் குமார் இடம்பெற்றிருக்க வேண்டும்.

Bhuvi

ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் விளையாடவில்லை என்றாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நிச்சயம் அவர் பங்களிப்பு இந்திய அணிக்கு அவசியமாக இருந்திருக்கும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் குல்தீப்க்கு வாய்ப்பு கிடைக்காததும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

kuldeep 1

ஏனெனில் சிட்னி மைதானத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது அவர் 5 விக்கெட் எடுத்து அசத்தி இருந்தார். ஆனாலும் அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை கடந்த சில தொடர்களாகவே புறக்கணிக்கப்பட்ட அவர் தற்போது இந்திய அணியிலிருந்தே புறக்கணிக்கும் அளவிற்கு வந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement