இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கொடுத்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் அவர் முன்பு போல அசத்தலான பார்மில் இல்லை என்றாலும் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டுமென்ற தந்திரத்தை அறிந்தவர். அவரது பவுலிங்கை கூர்ந்து கவனித்து விளையாட வேண்டும் இல்லையெனில் அவர் இந்திய அணி வீரர்களை எளிதாக வீழ்த்தி விடுவார். பந்து வீசும்போது கிரீசை விட்டு வெளியே வந்து ஆடினால் அது அவரது ரிதமை பாதிக்கும்.
எனவே இந்திய வீரர்கள் அவருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிராகவும் அதை தொடர விரும்புவார். 40 வயதை அவர் நெருங்கி இருந்தாலும் அவருக்கு வயது ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது.
ஏனெனில் இப்பொழுது கூட அவர் சற்றும் கலப்பில்லாமல் விளையாடி வருகிறார் இந்த சதாப்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.