- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதிர்ஷ்டத்தால் பும்ராவை அடிச்சுட்டு தற்பெருமை டாக்குமென்ட்ரி வேற.. பாக் வீரரை நேரலையில் செய்த ஆகாஷ் சோப்ரா

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்களை குவித்து அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 74 ரன்களுக்கு சுருட்டி மெகா வெற்றி பெற்றது.

அந்த வெற்றிக்கு பந்து வீச்சுத் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார். மிகவும் தனித்துவமாக பவுலிங் செய்யக்கூடிய பும்ராவை எதிர்கொள்வது எப்பேர்ப்பட்ட எதிரணி பேட்ஸ்மேனுக்கும் சுலபமாக இருக்காது. அதனாலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வந்தனர்.

- Advertisement -

அதிர்ஷ்டததில் தற்பெருமை:

இருப்பினும் கடந்த 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் ஓப்பனிங் வீரர் ஃபர்கான் அவருக்கு எதிராக சில சிக்ஸர்களை அடித்தார். அதன் வாயிலாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஃபர்ஹான் பெற்றார். இருப்பினும் அதை வைத்து அவர் செய்த தற்பெருமையான விளம்பரம் தாங்க முடியாததாக அமைந்தது.

ஏனெனில் பும்ராவுக்கு எதிராக பர்ஹான் சிக்ஸரை அடித்த போதிலும் ஆசியக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 3 தோல்விகளை சந்தித்து அவமானப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத பர்கான் இந்தியாவின் பும்ராவுக்கு எதிராக சிக்ஸர் அடித்ததை ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார். அதில் எப்போதுமே தாம் பவுலரை பார்க்காமல் பந்தை பார்த்து விளையாடுவதாகவும் ஃபர்கான் தற்பெருமை பேசினார்.

- Advertisement -

செஞ்சுவிட்ட ஆகாஷ் சோப்ரா:

எனவே ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பவுலர்களை சிக்ஸர் அடிப்பது தமக்கு எளிதானது என்ற வகையில் அவர் பேசியது பலரையும் கடுப்பேற்றியது. இந்நிலையில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பும்ராவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க வீரர்கள் சிக்ஸர் அடிக்க தடுமாறினார்கள். அப்போது நேரலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 1 விக்கெட் போதும்.. 3 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ஹார்டிக் பாண்டியா

“பும்ராவை சிக்ஸராக அடிப்பது அவ்வளவு எளிது கிடையாது. ஒருவேளை யாராவது ஒருமுறை சிக்ஸ் அடித்தால் கூட அதை அவர்கள் ஆவணப்படமாக எடுப்பார்கள்” என்று கூறினார். அதாவது குருட்டுத்தனமான அதிர்ஷ்டத்தில் பும்ராவை சிக்ஸர் அடித்ததை வைத்து ஆவணப்படம் என்ற பெயரில் ஃபர்ஹான் தற்பெருமை பேசியதாக ஆகாஷ் சோப்ரா நேரலையில் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -