விராட் கோலி மீது எந்த குறையும். தோனி இருந்த அப்போவும் இந்த நிலைமை இருந்துச்சி – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

- Advertisement -

2017ஆம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பும், அப்போது டெஸ்ட் அணியை வழிநடத்திக் கொண்டிருந்த விராட் கோஹ்லியிடமே வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர், அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷ் ட்ராபி தொடர் மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடர் என இரண்டு ஐசிசி தொடர்களிலும் கோப்பையை தவறவிட்டிருக்கும் இந்திய அணியானது, தற்போது நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் கோப்பையை தவறிவிட்டிருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியையை அடுத்து, விராட் கோஹ்லியின் கேப்டன்சியின் மீது மீண்டும் ஒரு முறை கடுமையான விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Kohli-1

இந்நிலையில் தோணி கேப்டனாக இருந்தபோதும் இந்திய அணி இதுபோன்ற தோல்விகளை சந்தித்துள்ளது என்று கூறி விராட் கோஹ்லிக்கு தனது ஆதரவை வழங்கி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷ் ட்ராபி தொடரில், மஹேந்திர சிங் தோணி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதற்குப் பிறகு இதுவரை ஐசிசி கோப்பையை இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லை. இந்த புள்ளி விவரங்களுடன் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. இது பற்றி அவர் கூறியதாவது,

இந்திய அணியானது 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு 6 முறை ஐசிசி தொடர்களில் பங்கு பெற்றிருக்கிறது. இதில் மூன்று முறை மஹேந்திர சிங் தோணி இந்திய அணியை வழிநடத்திச் சென்றிருக்கிறார். அப்போதும் இந்திய அணியானது கோப்பையை கைப்பற்றவில்லை. விராட் கோஹ்லியும் மூன்று முறை ஐசிசி தொடரில் இந்திய அணியை வழிநடத்தி சென்று தோல்வியைச் சந்தித்திருக்கிறார். நிலமை இப்படி இருக்க, எப்படி ஒரு கேப்டனை மட்டுமே நம்மால் குறைகூற முடியும். கேப்டனை விட்டுவிட்டு அணிக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர்,

kohli

நாக் அவுட் போட்டிகளில் இந்திய வீரர்கள் எவரும் சரியாக விளையாடாமல் இருப்பதுதான், இந்திய அணியில் இருக்கும் பெரிய பிரச்சனை என்பதையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது; ரோஹித் சர்மாவின் அவரேஜ் மற்ற போட்டிகளில் 40க்கும் மேல் இருக்கிறது. அதுவே நாக் அவுட் போட்டிகளில் வெறும் 25-ஆகத்தான் இருக்கிறது. இதே நிலமை தான் கோஹ்லிக்கும், மற்ற போட்டிகளில் 50க்கும் மேல் சராசரி வைத்திருக்கும் அவர், நாக் அவுட் போட்டிகளில் 38 தான் வைத்துள்ளார்.

மஹேந்திர சிங் தோணியும் இதுபோல்தான் விளையாடியுள்ளார். மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் நாக் அவுட் போட்டிகளில் அதே போல விளையாடுவதில்லை. இதுதான் இந்திய அணிக்கு இருக்கும் பிரச்சனை என்று அவர் கூறியுள்ளார்.

Dhoni-kohli

இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் விளையாட இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. எனவே அந்த தொடரில் அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement